வணக்கம்!
நான் கடந்த 17-07-2010 சனிக்கிழமை காலை எனது கணினியை திறக்கும் பொழுது எனக்கு ஓர் பேரதிர்ச்சி காத்திருந்தது. முதலில் Firefox திறந்த பொழுது, Homepage ஆன எனது ப்ளாக் http://suryakannan.blogspot.com -ல் No Posts என காண்பித்தது.
அடுத்த டேபில் ஜிமெயில் (suryakannan@gmail.com) கணக்கில் நுழைய முயன்றபொழுது The username or password you entered is incorrect. என்று வந்தது. அப்பொழுது சரியாக பதிவர் நண்பர் வேலன் அவர்களின் தொலைபேசி அழைப்பு வந்தது. 'உங்க ப்ளாக் என்னாச்சு?' என அவர் கேட்டிருந்தபொழுது, 'நானும் இப்போதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்' என்று பதிலளித்த போதும், எனக்கு அந்து பிரச்சனையின் தீவிரம் பிடிபட்டிருக்கவில்லை.
எவ்வளவோ முயன்றும் ஜிமெயில் கணக்கில் நுழைய முடியவில்லை. சரி ஏதாவது cookies பிரச்சனியாக இருக்கலாம் என்று History clear செய்து விட்டு, CCleaner ஐயும் ஓடவிட்டு முயற்சித்துப் பார்த்தும் எந்த பயனும் இல்லை. அடுத்து எனது யாஹூ (suryakannan@yahoo.com) கணக்கில் நுழைய முயன்றபொழுதும், The username or password you entered is incorrect. அதே பிரச்சனை தான். கொஞ்சம் பதட்டம் உருவாக ஆரம்பித்தது.
பதிவர் நண்பர் ஷிர்டி சாய்தாசன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். விவரத்தை சொன்னேன். அவரும் அவரது கணினியில் முயன்று பார்த்து, ப்ளாக் பிரச்சனையும், கூடுதலாக 'உங்க ஈமெயில் முகவரிக்கு நான் ஈமெயில் செய்தால், email id not exists.. ன்னு வருது' என்று சொன்னவுடன், பதட்டம் மேலும் அதிகரித்தது. மேலும் அவர் 'பதட்ட படாதிங்க.. நிதானமா உங்க வாசகருக்கு இந்த பிரச்சனை வந்தது போல கருதி இதற்கான தீர்வை கண்டறியுங்கள்..' என்றார்.
கணினி அறையை விட்டு வெளிவந்து ஒரு சிகரெட் பிடித்தேன். ஒரு கோப்பை தேநீரும் கூட. மறுபடியும் கணினி முன்னால் அமர்ந்து, Rediff mail திறக்க முயன்றபொழுதும், அதற்கடுத்து, Facebook, Orkut, Twitter, Blogger எந்த கணக்கிலும் நுழைய முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்ந்து முடிந்த விபரீதம் எனது முகத்தை அறைந்தது.
யாருக்காவது மின்னஞ்சல் செய்து ஆறுதல் பெறலாம் என யோசித்தபொழுது, யாருக்கு, எப்படி? அனைத்து முகவரிகளும், எனது ஜிமெயில் Contact list -இல் அல்லவா உள்ளது என்று உணர்ந்ததும், BP எகிறியது. பதிவுலகில் பாலா சார் முகவரி மட்டும் லேசாக நினைவில் இருந்தது போலிருந்தது, பிறகு நான் தோராயமாகத்தான் அவருக்கு நிலையை குறித்து மின்னஞ்சல் செய்தேன். அவரிடமிருந்து தொடர்ந்து வந்த பதில்களில் கொஞ்சம் பதட்டம் குறைந்து, நிதானமாகியிருந்தேன்.
ஜிமெயில் recovery வசதிகள் அனைத்துமே முயன்றாகிவிட்டது. ஜிமெயிலில் Recovery/Alternate Email Id யாக எனது யாஹூ id ஐத்தான் கொடுத்திருந்தேன். யாஹூ கணக்கும் முடக்கப்பட்டு விட்டபிறகு அந்த வழியும் அடைபட்டு போனது. யாஹூ Recovery யும் தோல்விதான்.
இந்த முடக்கப்பட்ட கணக்குகள் அனைத்திற்கும் உள்ள ஒற்றுமை, அதன் பயனர் பெயர் suryakannan என்பதும், மற்றபடி Twitter போன்றவை ஜிமெயில் கணக்கை உபயோகித்து உருவாக்கியிருந்ததால், அதையும் இழக்கவேண்டியிருந்தது என்பதை உணர முடிந்தது. சரி! இதெல்லாம் போய்விட்டது, அடுத்து வேறென்ன தீர்வு என யோசித்ததில், முதலில் மனதில் தோன்றியது ப்ளாக்? அது போனால் போகட்டும், (மொத்தம் 249 இடுகைகள், 419 followers, 2 ,81 ,000 க்கும் அதிகமான ஹிட்ஸ், குறிப்பாக அலெக்சா ரேங்க் கடந்த மூன்று மாத கணக்கில் 1,12,967 இந்த மாதத்தில் 92237 , அதாவது எனது எதிர்பார்ப்பான ஒரு லட்சத்தை அடைந்து விட்டேன். ) சரி போனால் போகட்டும், புதியதாக ஒரு ப்ளாக் ஆரம்பித்து விடலாம். ஏற்கனவே எடுத்து வைத்திருந்த பேக் அப் இடுகைகள் 244 இருந்தது, இவற்றைக் கொண்டு தற்பொழுது http://sooryakannan.blogspot.com என்ற இந்த வலைப்பூவை ஆரம்பித்துளேன். (உங்களது மேலான ஆதரவை நம்பி)
இந்த சம்பவம் குறித்து பாலா சார் தனது இடுகையில் தெளிவாக கூறியிருந்தார். அவருக்கும், எனது ஆறுதல் அளித்த நண்பர்கள், ஆலோசனை கூறி ஊக்கப் படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றி!
நான் இழந்தது குறிப்பாக எனது வியாபர சம்பந்தப்பட்ட contacts , முக்கிய மின்னஞ்சல்கள். மற்ற பதிவுலக நண்பர்களுக்கு நிகழ்ந்தது போல எனக்கு எனது ப்ளாக் மட்டும் போகவில்லை.
நான் எனது மின்னஞ்சல் கணக்கில், பண பரிவர்த்தனை எதுவும் செய்வது கிடையாது. நான் பெரிய வியாபார காந்தமும் கிடையாது, பிறகு எந்த காரணத்தைக் கொண்டு எனது இந்த கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. இதை ஹேக் செய்தவர்களின் நோக்கம் என்ன? இதனால் அவர்கள் அடையும் பயன் என்ன? பணமோ, வியாபாரமோ இதற்கு காரணமல்ல. எனது ப்ளாக் இன் பாப்புலாரிட்டியை அழிப்பதுதான் இவர்களது நோக்கமாக இருக்க முடியுமென்று தோன்றுகிறது. இந்த பாப்புலாரிட்டியை வைத்துக் கொண்டு நான் என்ன பெரிதாய் சாதித்து விட முடியும்? பத்து பைசாவிற்கு பிரயோஜனம் கிடையாது.
இழந்தவற்றை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. பார்ர்க்கலாம். மேலும் இந்த நிகழ்வு எப்படி நடந்திருக்க முடியும், தீர்வு (கிடைத்தால்!) என்ன என்பதைப் பற்றி மற்றொரு இடுகையில் பார்க்கலாம்.
இந்த எனது புதிய வலைப்பூவிற்கு உங்கள் ஆதரவை அளித்து உதவுமாறு வேண்டி விடைபெறுகிறேன்.
எனது புதிய மின்னஞ்சல் முகவரி makcoonoor@gmail.com இது தொடர்பு கொள்ள உங்களுக்கும், இல்லாதொழிக்க ஹேக்கர்களுக்கும்.
நன்றி
அன்புடன்